எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியான மலையாளப் படம் 'எல் 2 எம்புரான்'. பான் இந்தியா படமாக இப்படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
வெளியீட்டிற்கு முன்பாக முன்பதிவில் சாதனைகளை இந்தப் படம் படைத்தது. இன்று முதல் நாள் வசூலாக 100 கோடியைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் பலரும் யு டியூப் சேனல்கள், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாத அளவில் உள்ளதாக அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். முதல் பாகத்துடன் ஒப்பிடும் போடும் இரண்டாம் பாகத்தில் கதையே இல்லை என்று அவர்கள் குறை சொல்கிறார்கள். படத்தின் மேக்கிங் சிறப்பாக இருந்தாலும் கன்டென்ட் சிறப்பாக இல்லாததால் படம் ஆங்காங்கே போரடிக்கிறது என்பதுதான் அவர்களது ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது.
மலையாள ரசிகர்கள் ரசித்தாலும் மற்ற ரசிகர்கள் படத்தை ரசிக்க முடியுமா என்பது சந்தேகம் என்றும் தெரிவிக்கிறார்கள்.