உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு?

எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு?

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான மலையாளத் திரைப்படம் 'எல் 2 எம்புரான்'. பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் இப்படம் வெளியாகி உள்ளது. படத்திற்கான முன்பதிவு பெருமளவில் நடந்து 50 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்திருந்தது.

நேற்று முதல் நாள் வசூலாகவும் 50 கோடி வசூலை இந்தப் படம் நிச்சயம் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 25 கோடி, வெளிநாடுகளில் 25 கோடி என 50 கோடிக்குக் கணக்கு சொல்கிறார்கள். மலையாளத் திரையுலகத்தில் இதுவரை முதல் நாளில் எந்த ஒரு படமும் செய்யாத வசூல் சாதனையை இந்தப் படம் நிச்சயம் செய்திருக்கும் என உறுதியாகத் தெரிவிக்கிறார்கள்.

படத் தயாரிப்பு நிறுவனம் இன்றைக்குள் எப்படியும் அதிகாரப்பூர்வ வசூலை தெரிவிக்க வாய்ப்புள்ளது. அப்போது உண்மை வசூல் என்னவென்பது தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !