இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஹிருத்திக் ரோஷன்
ADDED : 241 days ago
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடித்து கடந்த 2006ம் ஆண்டில் இவரது தந்தை ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் கிரிஷ் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இதன் அடுத்த பாகங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்றன.
இந்த நிலையில் ராகேஷ் ரோஷன் அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஹிருத்திக் 25 வருடத்திற்கு முன்பு நான் உன்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினேன். இப்போது ஹிருத்திக் ரோஷன் இயக்குனராக கிரிஷ் 4ம் பாகத்தின் மூலம் அறிமுகமாகிறார்'' என அறிவித்துள்ளார்.
இந்த படத்தை ஆதித்யா சோப்ரா மற்றும் ராகேஷ் ரோஷன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். பிரமாண்ட படமாக பெரிய பட்ஜெட்டில் கிரிஷ் 4 தயாராகிறது.