ரூ.100 கோடி வசூலை கடந்த எம்புரான்
ADDED : 192 days ago
மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான லூசிபர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமாக எம்புரான் உருவாகி, மார்ச் 27ல் பான் இந்தியா படமாக வெளியாகி உள்ளது.
ரிலீஸிற்கு முன்பே முன்பதிவில் சாதனை படைத்த இந்த படம் ரிலீஸிற்கு பின் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூல் சிறப்பாக அமைந்துள்ளது. இரண்டு நாட்களிலேயே உலகம் முழுக்க ரூ.100 கோடி வசூலித்துள்ளது. மலையாள சினிமாவில் இருநாளில் எந்த படமும் செய்திராத வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துள்ளார் மோகன்லால்.