ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ?
இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடி போட்டோ ஷுட் போடும் சில நடிகைகளில் முக்கியமானவர் மாளவிகா மோகனன். கிளாமரான போட்டோக்கள் பலவற்றை அவ்வப்போது பதிவிட்டு லைக்குகளை அள்ளுவார்.
தற்போது மலையாளத்தில் 'ஹிருதயபூர்வம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்புக்காக தேக்கடியில் தங்கியிருந்தது பற்றிய அனுபவத்தை நீண்ட பதிவாக இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் இது போன்ற இயற்கையான இடத்தில் ஒரு குட்டி வீட்டில் தங்க வேண்டும் என்பது தனது கனவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவிற்கான போட்டோவில் லுங்கி கட்டிக் கொண்டு அவர் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். கேரள மக்களில் பெண்கள் கூட லுங்கியைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தக் காலத்தில் வயதான பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். இருந்தாலும் மாளவிகா லுங்கி கட்டிக் கொண்டு பதிவிட்டுள்ள புகைப்படமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.