உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நளினியுடன் இணைந்தது உண்மையா? நடிகர் ராமராஜன் விளக்கம்

நளினியுடன் இணைந்தது உண்மையா? நடிகர் ராமராஜன் விளக்கம்


கடந்த 25 ஆண்டுகளாக விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நடிகர் ராமராஜன், நடிகை நளினி ஆகியோரை அவர்களது பிள்ளைகள் சேர்த்து வைத்து விட்டதாக ஒரு செய்தியை சோசியல் மீடியாவில் பரவி வந்தது. இந்த நிலையில் அதற்கு நடிகர் ராமராஜன் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அந்த செய்தியில், ''நானும், நளினியும் இணைந்து விட்டோம் என்ற செய்தி உண்மை இல்லை. நடக்காத ஒரு விஷயத்தை பற்றி வதந்தி பரப்பாதீர்கள். நாங்கள் பிரிந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. தனித்து வாழ்வதற்கு நான் பழகி விட்டேன். அதனால் இது போன்ற வதந்திகளால் நானும், நளினியும் மட்டுமின்றி எங்கள் பிள்ளைகளும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். என்னை பொறுத்தவரை நளினியுடனான உறவு எப்போதோ முடிந்து விட்டது. இனிமேல் நாங்கள் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை. அது ஒரு நாளும் நடக்காது. எனவே தயவுசெய்து யாரும் இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார் நடிகர் ராமராஜன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !