பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது
ADDED : 181 days ago
தெலுங்கில் அசோக் தேஜா இயக்கத்தில் பெண் சாமியார் வேடத்தில் தமன்னா நடித்துள்ள படம் ஒடேலா 2. தீய சக்திகளை எதிர்த்து போராடும் வேடத்தில் தமன்னா நடித்துள்ள இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கும்பமேளா நடத்த பிரக்யா ராஜ் நகரில் நடந்து முடிந்தது. தற்போது இந்த படம் ஏப்ரல் 17ஆம் தேதி திரைக்கு வரப்போவதாக அறிவித்து இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள். மூன்று நிமிடம் ஓடக்கூடிய இந்த டிரைலரில் அதிரடியான பெண் சாமியார் வேடத்தில் ஆவேசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் தமன்னா. இந்த படத்தின் முதல் பாகமான ஒடேலா என்ற படம் ஹிட் அடித்ததால் இந்த இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தெலுங்கில் உருவான இந்த படத்தை தமிழ், ஹிந்தியில் டப் செய்து வெளியிடுகிறார்கள் .