ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்
ADDED : 217 days ago
அமரன் படத்திற்கு பின் மதராஸி, பராசக்தி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதையடுத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். தன்னுடைய எஸ்கே புரொடக்ஷன் சார்பில் கனா, நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, டாக்டர், டான், கொட்டுக்காளி என பல படங்களை தயாரித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது ஹவுஸ் மேட்ஸ் என்ற படத்தை தனது நிறுவனம் சார்பில் வெளியிடப் போகிறார். ராஜவேலு என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் கனா படத்தில் நடித்த தர்ஷன் மற்றும் காளி வெங்கட், வினோதினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் காமெடி கதையில் உருவாகி இருக்கிறது.