ரசிகர்களுடன் குட் பேட் அக்லி படம் பார்த்து ரசித்த ஷாலினி அஜித்
ADDED : 217 days ago
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் இன்றைய தினம் உலகம் எங்கும் வெளியாகி உள்ளது. இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு முழுக்க இந்த படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. சென்னையில் இந்த படம் திரையிடப்பட்டு உள்ள தியேட்டர்களில் பல முக்கிய சினிமா பிரபலங்களும் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்துள்ளனர். அஜித் குமாரின் மனைவியான நடிகை ஷாலினியும் தனது மகளுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டரில் இப்படத்தை பார்த்து ரசித்துள்ளார். அது குறித்த வீடியோ புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதேப்போல் இயக்குனர் ஆதிக், நடிகர்கள் ரியோ, ரெடின் கிங்ஸ்லி, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரும் ரசிகர்களுடன் இந்த படத்தை பார்த்து ரசித்தனர்.