'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு!
ADDED : 190 days ago
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' படத்தில் காவாலா என்ற பாடலுக்கு நடனமாடிய தமன்னா, அதையடுத்து 'ஸ்ட்ரீ -2' என்ற ஹிந்தி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடலும் காவாலா பாடலைப் போன்று மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதையடுத்து தற்போது 'ரெய்டு- 2' என்ற ஹிந்தி படத்திலும் ஒரு பாடலுக்கு கிளாமர் நடனமாடியுள்ளார் தமன்னா.
'நாஷா' என்று தொடங்கும் அந்த பாடல் இன்று வெளியானது. இந்த பாடலில் ஜாக்குலின் பெர்னாண்டசும் தமன்னாவுடன் இணைந்து நடனமாடி இருக்கிறார். மேலும், அஜய் தேவ்கன் ரித்தேஷ் தேஷ்முக், வாணி கபூர், சுப்ரியா பதக் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் மே ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது.