உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்


2006ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் பிரபலமானவர் ஸ்ரீ. அதன் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண் 18/9' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 'மாநகரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் நின்று விடவே அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாதபடி இருக்கிறார். இணையத்தில் வெளியான இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என கவலையோடு கேட்டு வருகின்றனர். ஆனால் ஸ்ரீ தனது உடல்நிலை குறித்து இந்த தகவலையும் வெளியிடவில்லை. இது அவர் நடிக்கப் போகும் ஒரு படத்தின் உடல் நிலை மாற்றம் என்று கருதி ரசிகர்கள் ஆறுதல் அடைந்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !