ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு
ADDED : 208 days ago
கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்த படம் சச்சின். ஜான் மகேந்திரன் இயக்கிய இந்த படத்தில் விஜய்யுடன் ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, சந்தானம், ரகுவரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். இந்த படம் அப்போதும் 10 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சச்சின் படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. அந்த வகையில் இந்த படம் நேற்று முதல் நாளில் உலக அளவில் 1.9 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.