கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக மற்றும் குணச்சித்ர கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரியதர்ஷி புலிகொண்டா. இவர் ஏ.ஆர்.முருகதாஸின் ‛ஸ்பைடர்', ஷங்கரின் ‛கேம் சேஞ்சர்' உள்ளிட்டட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் தெலுங்கில் 'கோர்ட்' எனும் படத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சமீபத்தில் தமிழில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமா குறித்து அவர் கூறியதாவது,ஷங்கர் சார், ஏ.ஆர்.முருகதாஸ் சார் இயக்கத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷம். சினிமாவில் கமல்ஹாசன் சார்தான் என்னோட இன்ஸ்பிரேஷன். அவர்கூட நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதேமாதிரி, மணிரத்னம் சார், பா.ரஞ்சித் சார், வெற்றிமாறன் சார் படங்களில் நடிக்கணும்னு என் விருப்பம். பா.ரஞ்சித் சார் நான் பிரமிக்கிற பெரிய இயக்குநர். மக்களை நேசிக்கிற சமூகச் செயற்பாட்டாளர். அவர் படத்துல நடிக்கணும்னு ரொம்பவே ஆசைப்படுறேன் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.