மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
156 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
156 days ago
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவரும் ஏறக்குறைய சமகாலத்தில் அறிமுகமாகி ஒன்றாக வளர்ந்து போட்டி நடிகர்களாக உயர்ந்தார்கள். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் போல அடுத்து அஜித் - விஜய் என்ற போட்டி கடுமையாக இருந்தது. இவர்களது காலத்தில் சமூக வலைத்தளங்கள் வளர்ந்ததால் அதில் இருவரது ரசிகர்களும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது வழக்கமாக இருந்தது.
விஜய் சினிமாவுக்கு முழுக்கு போட்டு, தீவிர அரசியலில் இறங்கும் சூழ்நிலையிலும் இருவரது ரசிகர்களுக்குமான மோதல் இன்னும் தீரவில்லை. நேற்று அஜித் பத்மபூஷன் விருது வாங்கிய நிலையில் நேற்று காலை முதல், அஜித் பற்றிய பழைய கிசுகிசு ஒன்றை விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே வைரலாகப் பரப்பினார்கள் என அஜித் ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள். பதிலுக்கு அஜித் ரசிகர்களும் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கமெண்ட்டுகளை பதிவிட்டார்கள். அவரது பழைய காதல், தற்போதைய காதல் என நிலவரம் கலவரமாகவே இருந்தது.
அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதும் பல சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் வந்தன. ஆனால், தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கும் விஜய், அஜித்துக்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. இருந்தாலும், அவர் தனிப்பட்ட விதத்தில் அஜித்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார் என்று செய்திகள் வந்தன.
எதற்கெடுத்தாலும் பலவற்றிற்காக வாழ்த்துகளைத் தெரிவித்து வந்த விஜய், இதற்கு மட்டும் வெளிப்படையாக வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி இன்றும் தொடர்கிறது. நேற்று அஜித் பத்மபூஷன் விருது பெற்றுள்ள நிலையில் அவருக்கு சமூக வலைத்தளத்திலாவது விஜய் வாழ்த்து சொல்லாமல் தவிர்ப்பதன் காரணம் என்ன என்று தெரியவில்லை.
சினிமா போட்டி என்பது வேறு, அரசியலில் வந்த பிறகு சொல்வதில் என்ன தயக்கம் ?.
156 days ago
156 days ago