சிறுநீர் குடித்தேன் - பரேஷ் ராவல் கருத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு
ADDED : 157 days ago
ஹிந்தித் திரையுலகத்தில் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பரேஷ் ராவல். ஹிந்தி தவிர, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் நடித்துள்ளார். 'சூரரைப் போற்று' படத்தின் மெயின் வில்லன் இவர்தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட முட்டி காயம் சீக்கிரம் குணமடைவதற்காக தனது சிறுநீரை 15 நாட்களுக்குக் குடித்ததாகக் கூறியிருந்தார்.
அவரது கருத்து சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அது குறித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிறுநீரைக் குடிப்பதால் அது குணமடைய வைக்கும் என்பதற்கான அறிவியல் ரீதியான ஆதாரங்கள் எதுவுமில்லை என டாக்டர்கள் பதிவு செய்து வருகின்றனர். அதனால், பாதிப்புகள்தான் வரும் என தெரிவித்துள்ளனர்.