மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
155 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
155 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
155 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
155 days ago
பாலிவுட் நடிகர் சல்மான்கான் வருகிற மே மாதம் 4, 5ம் தேதிகளில் தி பிக் பாலிவுட் ஒன் என்ற நிகழ்ச்சியை இங்கிலாந்தில் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் வருண் தவான், மாதிரி தீட்சித், டைகர் ஷெராப், கிர்த்தி சனோன், திஷா பதானி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க இருந்தார்கள். ஆனால் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்த நிகழ்ச்சியை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து இருக்கிறார் சல்மான் கான்.
இது குறித்து இந்த நிகழ்ச்சி குறித்த விளம்பரத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீரில் துயரமான சம்பவம் நடைபெற்றிருக்கும்போது, இதுபோன்ற ஆடம்பர நிகழ்ச்சியை ஒத்தி வைப்பது தான் சரியாக இருக்கும். இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்திருப்பார்கள். என்றாலும் இது நாம் மகிழ்ச்சியை கொண்டாட உகந்த நேரம் இது அல்ல என்பதினால் தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். சிரமத்திற்கு வருந்துகிறோம். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் சல்மான் கான்.
155 days ago
155 days ago
155 days ago
155 days ago