'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ADDED : 260 days ago
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, பிரகாஷ் வர்மா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'தொடரும்'. இப்படம் க்ரைம் த்ரில்லர் கதை களத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வசூலில் மலையாள பதிப்பில் உலகளவில் ரூ.100 கோடியை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்த நிலையில் தொடரும் படத்தின் தமிழ் பதிப்பு தமிழகத்தில் வருகின்ற மே 9ம் தேதி அன்று வெளியிடுவதாக இன்று அறிவித்துள்ளனர். தமிழ் பதிப்பிற்காக தமிழ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.