சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு?
ADDED : 147 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'ரெட்ரோ' படம் திரைக்கு வந்துள்ள நிலையில் தற்போது ஆர். ஜே. பாலாஜி இயக்கும் தனது 45வது இடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மேலும் இந்த படத்தை ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஒரு கதையைத் தழுவி எடுத்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி.
அதன் காரணமாகவே இப்படத்திற்கு 'வேட்டை கருப்பு' என்று டைட்டில் வைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, நட்டி நடராஜ், ஸ்வாசிகா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சாய் அபியங்கார் இசையமைக்கும் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது.