மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
146 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
146 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
146 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
146 days ago
சிவகங்கை மாவட்டம் சிக்கனம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக் கருப்பி. இவரது கணவர் குமார். இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனது மகளின் காதணி விழாவுக்காக தகர உண்டியலில் சிறுக சிறுக ஒரு லட்ச ரூபாய் பணத்தை சேர்த்து வைத்திருக்கின்றார் முத்துக் கருப்பி. அந்த உண்டியலை வீட்டுக்குள்ளேயே குழித்தோண்டி புதைத்து வைத்துள்ளார். ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் அந்த தகர உண்டியலுக்குள் கரையான் சென்று அந்த ரூபாய் நோட்டுகளை அரித்து இருக்கிறது.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு அந்த உண்டியலை முத்துக்கருப்பி திறந்து பார்த்தபோது, ரூபாய் நோட்டுகளை கரையான் அரித்து சேதப்படுத்தி இருப்பதை பார்த்து பலத்த அதிர்ச்சி அடைந்தவர் கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார். அப்படி அவர் கதறுவதை பார்த்த ஒருவர், அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர், அந்த பெண்ணை அழைத்து கரையான் அரித்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி மூலம் தான் மாற்றி தருவதாக உறுதி அளித்து இருக்கிறாராம்.
இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், முத்துக் கருப்பி மற்றும் அவரது கணவர் குமார் ஆகிய இருவரையும் சென்னைக்கு வர வைத்து தனது மாற்றம் தொண்டு நிறுவனத்தின் மூலம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பண உதவி செய்திருக்கிறார். அப்போது கரையான் அரித்த அந்த ரூபாய் நோட்டுகளையும் வாங்கி பார்த்துள்ளார் லாரன்ஸ். அதையடுத்து அந்த பெண்ணிடத்தில் ஒரு லட்ச ரூபாயை தனது சார்பில் அவர் கொடுத்தபோது கண்ணீர் மல்க வாங்கிக் கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இது குறித்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
146 days ago
146 days ago
146 days ago
146 days ago