உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து

விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து

கடந்த 2018ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் முதன்முறையாக இணைந்து நடித்தார்கள். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து டியர் காம்ரேட் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போதிலிருந்து அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. என்றாலும் அவர்கள் இருவரும் இப்போது வரை அதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. தாங்கள் இருவரும் நண்பர்கள் என்று மட்டுமே கூறி வருகிறார்கள்.

இப்படியான நிலையில் மே ஒன்பதாம் தேதியான நேற்று நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய 36 வது பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் தனது இணைய பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா. அந்த பதிவில், மீண்டும் எனக்கு தாமதம் ஆகிவிட்டது. ஆனால் பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜ்ஜு . உங்களுக்கு அனைத்து வகையான ஆசீர்வாதங்கள், ஆரோக்கியம் , அன்பு, மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு விஜய் தேவரகொண்டா, இது மிகவும் அழகான பதிவு என்று பதில் கொடுத்து இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !