உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ்

சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ்

சசிகுமார், சிம்ரன் இணைந்து நடித்து திரைக்கு வந்துள்ள டூரிஸ்ட் பேமிலி படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்து சத்திய சிவா இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் ப்ரீடம் என்ற படம் வருகிற ஜூலை மாதம் பத்தாம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். இந்த படம், ராஜீவ் படுகொலையில் ஈழத் தமிழர்களின் தொடர்பு உள்ளிட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. சசிகுமாருடன் லிஜோ மோல் ஜோஸ், மாளவிகா அவினாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த ப்ரீடம் படம் வெளியாவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !