இந்தியிலும் கலக்கும் ரெஜினா
ADDED : 142 days ago
தமிழில் 'கண்ட நாள் முதல்' படத்தில் சின்ன வேடத்தில் அறிமுகம் ஆனார் ரெஜினா கசாண்ட்ரா. பின்னர், 'கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன்' படங்களில் ஹீரோயினாக, முக்கியமான வேடங்களில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். 'விடாமுயற்சி' படத்தில் வில்லியாக நடித்தது அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்துள்ளது.
இப்போது சுந்தர்.சி இயக்கும் 'மூக்குத்திஅம்மன் 2' படத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இந்தியில் சன்னி தியோலுடன் அவர் நடித்த 'ஜாத்', அக்ஷய்குமாருடன் நடித்த 'கேசரி 2' படங்களிலும் அவரின் கேரக்டர் பேசப்பட, இப்போது இந்தியிலும் கவனம் செலுத்துகிறாராம்.