உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாதா சாகேப் பால்கே பயோபிக் படத்தில் ஜுனியர் என்டிஆர்?

தாதா சாகேப் பால்கே பயோபிக் படத்தில் ஜுனியர் என்டிஆர்?

இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவின் முதல் திரைப்படமான 'ராஜா ஹரிஷ்சந்திரா' படத்தைத் தயாரித்து இயக்கி 1913ம் ஆண்டு வெளியிட்டவர். பல படங்களைத் தயாரித்து, இயக்கினார். 1870ம் ஆண்டு பிறந்து 1944ம் ஆண்டு காலமானார். இந்தியாவில் சினிமாவைக் கொண்டு வர, அதை வளர்க்க அவர் செய்த செயல்கள் சாதாரணமானவை அல்ல. அவரது பெயரால்தான் இந்தியாவின் உயரிய சினிமா விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது.

அவரது பயோபிக் படத்தை உருவாக்க ராஜமவுலி, அவரது மகன் கார்த்திகேயா, மேக்ஸ் ஸ்டுடியோஸ் வருண் குப்தா ஆகியோர் முயன்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. படத்திற்கான கதை, திரைக்கதை ஆகியவை தயாராக இருப்பதாகவும் அதைக் கேட்ட ஜுனியர் என்டிஆர் இந்த படத்தில் அவரது கதாபாத்திரல் நடிக்க விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜுனியர் என்டிஆர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படம், ஹிந்தியில் வார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவற்றை முடித்த பிறகு பால்கேவின் பயோபிக் படத்தில் நடிப்பார் என்கிறார்கள். ஆனால், இவை பேச்சுவார்த்தை கட்டத்தில் இருப்பதாகவும், அவை முடிந்த பிறகு உண்மை நிலவரம் தெரிய வரும் என்றும் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !