மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
140 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
140 days ago
தமிழ் சினிமாவில் இன்றைக்கு எவர்க்ரீன் கதைக்கருவாக இருப்பது பாசம். அம்மா பாசம், அண்ணன் பாசம், தங்கைப் பாசம், அப்பா பாசம் ஆகியவற்றைப் பற்றித்தான் அதிகமான படங்கள் வரும். தாய் மாமன் பாசம் என்பது அபூர்வம். அப்படியான ஒரு பாசத்தை மையமாக வைத்து நேரடியாகவே 'மாமன்' என்ற பெயருடன் நாளை வெளியாக உள்ளது சூரி நடித்துள்ள படம். சமீப காலங்களில் இப்படியான பாசக் கதைகளை எமோஷனல் ஆக சொல்லி சில படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன.
'லப்பர் பந்து, குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி' ஆகியவை இப்படியான பாசக் கதைகள்தான். அப்படியான ஒரு வரவேற்பு 'மாமன்' படத்திற்குக் கிடைக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.
ஒரு பக்கம் பாசக் கதை என்றால் மறுபக்கம் பேய்க் கதை. பல வருடங்களாகவே பேய்ப் படங்கள் வந்தாலும் 'காஞ்சனா' பேய் வந்த பிறகுதான் நிறைய பேய்ப் படங்கள் வர ஆரம்பித்தன. அவற்றில் சில பெரும் வெற்றியையும் பெற்றுள்ளன. சந்தானம் கதாநாயகனாக மாறிய பின் அவருக்கு காமெடிப் படங்கள் கை கொடுத்ததை விட 'கோஸ்ட்' படங்கள்தான் வசூலை அள்ளித் தந்தன. 'தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டர்ன்ஸ்' இரண்டுமே நல்ல ரிட்டர்ன்ஸ் தந்தன. அந்த வரிசையில் நாளை 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் வருகிறது. வழக்கம் போல பேயும், காமெடியும் இணைந்த இந்தப் படம் சந்தானத்திற்கு ஹாட்ரிக் வெற்றியைத் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேய், பாசம் இரண்டில் எது வெற்றி பெற்றாலும் அல்லது இரண்டுமே வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து இது போன்ற படங்களை எதிர்பார்க்கலாம்.
140 days ago
140 days ago