மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
141 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
141 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
141 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
141 days ago
நடிகர் சந்தானம் நடித்து நாளை(மே 16) வெளியாக உள்ள, 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய, 'கோவிந்தா...' பாடல் எதிர்ப்பு காரணமாக நீக்கப்பட்டுள்ளது.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‛‛டிடி நெக்ஸ்ட் லெவல்'. நடிகர் ஆர்யா இதை தயாரித்துள்ளார். நாளை மே 16ல் படம் வெளியாகும் நிலையில் இப்படத்திலிருந்து 'Kissa 47' என்ற பாடலின் வரிகளில் ‛‛பார்க்கிங் காசுக்கு கோவிந்தா, பாப்கார்ன் டாக்ஸ் கோவிந்தா, ஹீரோயின் நடிப்புக்கு கோவிந்தா...'' என ‛ஸ்ரீனிவாச கோவிந்தா' எனும் பெருமாள் பாடலை கிண்டல் செய்வதாக எதிர்ப்பு கிளம்பியது.
சேலத்தில் சந்தானம் மற்றும் ஆர்யா மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பதியில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்தனர். பாடலை நீக்க வேண்டும் என கூறியிருந்தனர். மேலும் அந்த பாடலை நீக்காவிட்டால் தமிழக மக்கள் பிரதிநிதிகள் திருப்பதி வர முடியாது என எச்சரிக்கை விடுத்தனர். அதோடு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரான பானுபிரகாஷ் ரெட்டி என்பவர், ‛‛இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது நோட்டீஸ் அனுப்பினார். மேலும் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்து இந்த பாடலால் படக்குழுவிற்கு எதிர்ப்பு கிளம்பியதால் வேறு வழியின்றி இந்த பாடலை நீக்க படக்குழுவினர் முடிவெடுத்ததாக தகவல் வந்தது.
இந்நிலையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், பக்தி பாடலின் வரிகளை மாற்றி, படத்துக்கு சம்பந்தமில்லாமல், வெங்கடேஸ்வரரை அவமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள பாடலை நீக்காமல், படத்துக்கு தணிக்கை குழு சார்பில், யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளதால், சென்சார் சான்றை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். பாடலை நீக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில், குறிப்பிட்ட பாடலில், ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்பட்டு, பாடல் மாற்றியமைக்கப்பட்டு, புதிய சென்சார் சான்று பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
141 days ago
141 days ago
141 days ago
141 days ago