உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன?

டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன?

மே 16ம் தேதியான நேற்று சந்தானம் நாயகனாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் சூரி நாயகனாக நடித்திருக்கும் மாமன் என்ற இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இவற்றுடன் யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க படமும் வெளியானது. இதில், டிடி நெக்ஸ்ட் லெவல் காமெடி ஹாரர் கதையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சந்தானத்துடன் கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், மொட்ட ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பிரேம் ஆனந்த் இயக்கினார்.

சூரி நடித்துள்ள மாமன் படம் குடும்ப உறவுகள் மற்றும் தாய் மாமனின் பொறுப்புகளை சொல்லும் கதையில் உருவாகி இருக்கிறது. இதில் சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருக்கிறார்.

இந்த இரு படங்களின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் நேற்று முதல் நாளில் தமிழகத்தில் 2.54 கோடி வசூலித்து இருக்கிறது. சூரியின் மாமன் படம் முதல் நாளில் 1.53 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !