சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : 192 days ago
மூக்குத்தி அம்மன்- 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, ஸ்டூடன்ட்ஸ், ராக்காயி, டாக்ஸிக் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில், அடுத்தபடியாக தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 157வது படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார் நயன்தாரா. இப்படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார்.
இது குறித்த அறிமுக வீடியோ ஒன்றை தற்போது படக் குழு வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே நயன்தாரா சிரஞ்சீவியுடன் காட்பாதர், சைரா நரசிம்மரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக சிரஞ்சீவியுடன் நடிக்கப் போகிறார் நயன்தாரா.