உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா!

புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா!

ஜெயிலர், அரண்மனை 4 படங்களுக்கு பிறகு தமன்னா நடிப்பில் ஓடேலா 2 என்ற தெலுங்கு படம் வெளியானது. அதையடுத்து தற்போது அவர் ஹிந்தியில் ரேஞ்சர், விவிஏஎன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இதில், விவிஏஎன் என்ற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. தீபக் மிஸ்ரா என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான நிலையில், தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த ஒரு போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் தமன்னா. அதில், இப்படம் 2026ம் ஆண்டு மே 15ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமன்னா நடிக்கும் விவிஏஎன் படத்தின் ரிலீஸ் தேதி ஓராண்டுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !