ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்!
ADDED : 185 days ago
‛சிக்கந்தர்' படத்திற்கு பிறகு தெலுங்கில் ‛கண்ணப்பா' என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த காஜல் அகர்வால், தற்போது ஹிந்தியில் ‛தி இந்தியா ஸ்டோரி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ‛ராமாயணா பார்ட் -1' படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் ராமர் வேடத்தில் ரன்வீர் கபூரும், சீதை வேடத்தில் சாய்பல்லவியும் நடிக்கும் நிலையில், ராவணனாக கேஜிஎப் நாயகன் யஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மண்டோதரி என்ற வேடத்தில் நடிக்க தற்போது காஜல் அகர்வால் கமிட்டாகியுள்ளார். கடந்த மாதத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பில் யஷ் கலந்து கொண்டார். விரைவில் காஜல் அகர்வாலும் கலந்து கொள்ளப் போகிறார். இந்த ராமாயணா படம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.