உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை

ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை


'ரெட்ரோ' படத்திற்குப் பிறகு சூர்யா நடித்து வரும் அவரது 45வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க, த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்து உறுதி ஆனது. அப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளது. தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சித்தாரா என்டர்டெயின்மென்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. சூர்யா ஜோடியாக மமிதா பைஜு அல்லது பாக்யஸ்ரீ போர்சே நடிக்க வாய்ப்புள்ளது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த 'வாத்தி' படத்தை இந்நிறுவனம்தான் தயாரித்தது. அவர்களது அடுத்த தமிழ்ப் படத் தயாரிப்பு இது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'லக்கி பாஸ்கர்' படம் தியேட்டர்களிலும் ஓடிடி தளத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிட வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !