உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன்

பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன்

தமிழகத்தில் பிரபலமான மேடை பாடகர், பாடலாசிரியர் அனிஷ். இவரின் செல்லப்பெயர் பால்டப்பா. ஆவேசம் படத்தில் இவர் பாடல் பிரபலமானது. ஜெயம் ரவி நடித்த ‛பிரதர்' படத்தில் மக்கா மிஷி பாடலை எழுதியவரும் அவர்தான். இப்போது அவர் நடிகர் ஆகிவிட்டார். கோலிசோடா, பத்து எண்றதுக்குள்ள, மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களை இயக்கிய விஜய் மில்டனின் அடுத்த படத்தில் பால்டப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பெயரிடப்படாத அந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராஜ் தருணும் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகிறார். கோலி சோடா கதையின் தொடர்ச்சியாக இந்த கதை உருவாக உள்ளது. சின்ன வயதில் இருந்து குளிர்ந்த பாலை நேசித்ததால் தனது பெயரை பால் டப்பா என மாற்றியிருக்கிறார் வினிஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !