உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி

மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி

இயக்குனர் எழில் தமிழில் ‛துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி' உள்ளிட்ட தொடர்ந்து பல காதல் படங்களாக இயக்கி வந்தார். ஒருக்கட்டத்தில் காதல் படங்களை விட்டு விலகி காமெடி படங்களாக இயக்கினார். தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களை இயக்கினார். தற்போது தேசிங்கு ராஜா 2 படத்தை இயக்கி உள்ளார். ஜூலை மாதம் படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் வெற்றிக்கு பின் 9 ஆண்டுகளுக்கு பிறகு எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான கதை விவாத பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !