மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல்
ADDED : 139 days ago
நடிகர் விமல் வெற்றி தோல்வி என பயணித்து வருகிறார். குறிப்பாக விலங்கு வெப் தொடருக்கு பிறகு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது தேசிங்கு ராஜா 2, பரமசிவன் பாத்திமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்தப்படியாக மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான படம் 'ஜென்.இ.மேன்' . பசில் ஜோசப், லால் உள்ளிட்டோர் நடித்தனர். இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் விமல் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனை சிதம்பரத்தின் உதவி இயக்குநர் ஒருவர் தமிழில் இயக்குகிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.