உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி!

நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி!


'விஸ்வாம்பரா' படத்தை அடுத்து அணில் ரவிபுடி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிரஞ்சீவி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் நிலையில், இன்னொரு நாயகியாக கேத்ரின் தெரசாவும் கமிட்டாகி இருக்கிறார். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2026ம் ஆண்டு சங்கராந்திக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் கரு பொருளுடன் கூடிய ஒரு போட்டோஷூட்டை அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடத்தி உள்ளார்கள். படத்தின் கதாபாத்திரத்துக்கு ஏற்ப மாறி எடுத்துள்ள இந்த புகைப்படம் சிரஞ்சீவிக்கு பெரிய அளவில் திருப்தி கொடுத்திருக்கிறதாம். மேலும் காமெடி கலந்த கதையில் உருவாகும் இப்படத்தில் சிரஞ்சீவி, நயன்தாராவுக்கு இடையே அதிகப்படியான காமெடி காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாம்.

இந்த அணில் ரவிபுடிதான் கடந்த ஜனவரி மாதம் சங்கராந்திக்கு வெளியான, 'சங்கராந்திகி வஸ்துனம்' என்ற படத்தை இயக்கியிருந்தார். அப்படத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்திருந்தார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !