உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம்

இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம்

அன்பு இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள படை தலைவன் படம் வரும் மே 23ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அத்தனை வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்பட இசை வெளியீட்டு விழாவில் பிரேமலதா, ஏஆர் முருகதாஸ் சசிகுமார் உட்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது.

படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் சரியான திரை அரங்குகள் கிடைக்காத காரணத்தினாலும், கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரேமலதா தரப்பில் படம் வெளிவந்தே ஆக வேண்டும் என கூறுகிறாராம். ஆனால் நிலவும் சூழ்நிலைகளை பார்த்தால் படம் அடுத்த வாரம் தான் வெளியாகும் என தெரிகிறது. இருப்பினும் படத்தை ரிலீஸ் செய்ய முக்கியஸ்தர்கள் பலரும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பல படங்கள் வெளிவர உதவியாக இருந்த விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலையா என்று கோலிவுட்டில் சிலர் வருத்தமாக பேசுவதை கேட்க முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !