உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2வில் யோகிபாபு

ஜெயிலர் 2வில் யோகிபாபு

ஜெயிலர் 2 படப்பிடிப்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்து வருகிறது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிக்கப்பட்டது. குறிப்பாக, ரஜினிகாந்த்தை யோகிபாபு கிண்டல் செய்யும் காட்சிகள் பலராலும் பேசப்பட்டன. சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தன்னை ஒரு காமெடியன் கிண்டல் செய்வதை ரஜினி ஏற்றுக் கொண்டார். அந்த சீன்கள் படத்தில் இடம் பெறுவதை தடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஜெயிலர் 2விலும் யோகிபாபு இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கேரளாவில் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு படத்தில் காமெடி சீன்கள் ஜீவன் மாதிரி. அதை வெட்டக்கூடாது. குறைக்ககூடாது என்ற கொள்கையை பல ஆண்டுகளாக கடைபிடிப்பவர் ரஜினிகாந்த்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !