உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன்

ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன்

டூரிஸ்ட் பேமிலி வெற்றிக்குபின் சிம்ரன் மார்க்கெட் உயர்ந்துவிட்டது. அவர் கடைசியாக நடித்த அந்தகன், குட்பேக்லி, டூரிஸ்ட் பேமிலி என 3 படங்களிலும் அவர் கேரக்டர் பேசப்பட்டது. அதனால், ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார் சிம்ரன். அடுத்து அவர் கதைநாயகியாக நடித்த, ‛தி லாஸ்ட் ஒன்' என்ற படம் விரைவில் வருகிறது. அந்த படத்தை சிம்ரன் கணவர் தயாரிக்கிறார். இது திகில் கலந்த பேண்டசி படம். இந்த படங்களுக்குபின் பல கதைகளை அவர் கேட்டு இருக்கிறார். சிம்ரன் கணவர் தீபக், ‛ஓடு ராஜா ஓடு' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. பின்னர் அவர் நடிக்கவில்லை. விரைவில் சிம்ரன் மகன்கள் ஹீரோவாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !