பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம்
ADDED : 141 days ago
இசைத் துறையில் உள்ள பாடகர்கள், இசை அமைப்பாளர்கள் நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் மாறிக் கொண்டிருந்த நேரத்தில் பாடகர் மலேசிய வாசுதேவனும் இயக்குனர் ஆனார். அவர் இயக்கிய ஒரே படம் 'நீ சிரித்தால் தீபாவளி'.
இந்த படத்தில் சிவகுமார், ஹரிஷ் குமார், டெய்சி சோனியா, நிழல்கள் ரவி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.
படத்தில் அம்பிகாபதி, அமராவதி ரேன்ஞ்சுக்கு ஒரு காதல் கதை சொன்னார் வாசுதேவன், ஆனால் படம் தோல்வி அடைந்தது. உருக உருக சொன்ன காதலும், அளவிற்கு அதிகமான பாடல்களும் படத்தின் தோல்விக்கு காரணம் என்பார்கள். இந்த படத்தின் தோல்வியால் இதன்பிறகு மலேசியா வாசுதேவன் படங்கள் எதையும் இயக்கவில்லை.