புதுமுகத்திற்கு ஜோடியான சாய் பிரியா
பி.வாசு இயக்கிய 'சிவலிங்கா' படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பிரியா. அதன்பிறகு பூம் பூம் காளை, யுக சதம், டைனோசர்ஸ், பாம்பாட்டம் படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்தநிலையில் அவர் புதிய படம் ஒன்றில் மாடலிங் துறையில் முன்னணியில் உள்ள தமிழ்வாணன் தயாரித்து, நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை 'போங்கு' படத்தை இயக்கிய தாஜ் இயக்குகிறார். எம்.எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். விஜய் எஸ். குமரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் தாஜ் கூறும்போது உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன், வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பது தான் இந்தக்கதையின் மையம். அந்த இளைஞனுக்கு ஏற்படும் காதலில் வரும் பிரச்சனைகளையும், அவன் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், தன் அதிகாரத்தால் எப்படி சரி செய்கிறான் என்பது தான் இப்படத்தின் கதை என்றார்.