உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'குபேரா' டீசர் : தமிழை விட தெலுங்கில் கூடுதல் வரவேற்பு

'குபேரா' டீசர் : தமிழை விட தெலுங்கில் கூடுதல் வரவேற்பு

சேகர் கம்முலா இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் ஜுன் 20ம் தேதி வெளியாக உள்ள படம் 'குபேரா'. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படத்தின் டீசர் 'டிரான்ஸ் ஆப் குபேரா' என்ற தலைப்பில் நேற்று யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது.

இப்படத்தைத் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக்கியுள்ளதாக சொல்லப்பட்டாலும், படக்குழுவினர் தெலுங்கிற்குத்தான் முன்னுரிமை அளித்துள்ளார்கள். டீசரில் தெலுங்கிற்கு மட்டும் தெலுங்கு எனக் குறிப்பிடவில்லை. மற்ற மொழிளுக்கு என்னென்ன மொழியில் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழ் டீசர் 24 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் தெலுங்கு டீசர் 28 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழ் டீசர் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. டீசரைப் பார்த்து என்ன மாதிரியான கதை என்பது யூகிக்க முடியாத நிலையில் உள்ளது. தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மூவரும் போட்டி போட்டு படத்தில் நடித்துள்ளார்கள் என்பது மட்டும் டீசரைப் பார்க்கும் போது புரிகிறது. நல்லதொரு 'கன்டென்ட்' படத்தில் இருக்கலாம் என்ற நம்பிக்கை டீசரைப் பார்க்கும் போது வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !