புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம்
மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா. இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பியான இவர் வானவராயன் வல்லவராயன், வன்மம், யாக்கை, மாரி 2, கழுகு 2 உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். சமீபகாலமாக சில வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
கிருஷ்ணாவுக்கு ஏற்கனவே ஹேமலதா என்பவருடன் திருமணமான நிலையில் ஓராண்டிலேயே இருவரும் பிரிந்தனர். பின்னர் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் தற்போது கிருஷ்ணாவுக்கு எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் ஒரு கோவிலில் நடந்துள்ளது. அது குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் கிருஷ்ணா, புதிய ஆரம்பம் என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு பெண்ணுடன் மாலையும், கழுத்துமாக உள்ளார். இருவரின் முகமும் வெளியாகவில்லை. பின்னால் இருந்தபடி எடுத்த போட்டோவை கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.
இதுபற்றி விசாரித்ததில் மணப்பெண் பெயர் சாத்விகா சுரேந்திராம். இவர் ஒரு டாக்டர் என்கிறார்கள்.