முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள்
ADDED : 111 days ago
நடிகர் விஷால், தன்ஷிகா தங்கள் திருமண தேதியை அறிவித்துவிட்டனர். அதன்படி, ஆகஸ்ட் 29ல் அவர்கள் திருமணம் நடக்க உள்ளது. நடிகர் சங்க புது கட்டடத்தில்தான் என் திருமணம் என்று பல ஆண்டுகளாக கூறி வருகிறார் விஷால். அதனால் ஆகஸ்ட் 29க்குள் கட்டட வேலைகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் நடிகர் சங்க நிர்வாகிகள். இப்போதைக்கு நடிகர் சங்க புது கட்டத்தில் திருமண மண்டபம், கலை அரங்கம் இரண்டு பணிகளை முதலில் முடிக்க விறுவிறுப்பாக வேலைகள் நடக்கிறது. அதை முடித்துவிட்டு மற்ற பணிகளில் கவனம் செலுத்த உள்ளனர். கவுதம் மேனன் இயக்கும் படம், ரவி அரசு இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார் விஷால். தன்ஷிகா நடித்த யோகிடா விரைவில் வெளியாக உள்ளது. அடுத்தும் சில படங்களில் நடிக்கிறார் தன்ஷிகா.