தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன
ADDED : 112 days ago
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் தக் லைப். கடந்த ஐந்தாம் தேதி இந்த படம் திரைக்கு வந்தது. படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்தனர். இதன் காரணமாகவே நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்த இந்த தக்லைப் படம் முதல் நாளில் 17 கோடியும், இரண்டாவது நாளில் 7.15 கோடியும், மூன்றாவது நாளில் 7.75 கோடியும், நான்காவது நாளில் 6.5 கோடியும், ஐந்தாவது நாளில் 2.3 கோடியும் ஆறாவது நாளில் 1.8 கோடியும், ஏழாவது நாளில் 1.22 கோடியும், எட்டாவது நாளில் 1.15 கோடியும் வசூலித்து இருக்கிறது. அந்த வகையில் எட்டு நாட்களில் தக் லைப் படம் 43.39 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.