சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால்
ADDED : 110 days ago
நடிகை சிம்புவின் காதலிகளில் நிதி அகர்வாலும் ஒருவர். இருவரும் ஈஸ்வரன் காலகட்டத்தில் தீவிரமாக காதலித்தனர். சிம்பு வீட்டிற்கு அடிக்கடி நிதி அகர்வால் வருகிறார் என்று அப்போது செய்திகள் கசிந்தன. ஆனால், சில ஆண்டுகளாக இவர்கள் காதல் பற்றி பெரியளவில் செய்திகள் வரவில்லை. சென்னையை விட்டு பெங்களூர், ஐதராபாத்தில் அதிகம் தங்கினார் நிதி.
இந்நிலையில், ஹரி ஹர வீர மல்லு பட நிகழ்ச்சிக்காக சென்னை வந்த நிதி அகர்வாலிடம் பலரும் சிம்பு பற்றி கேட்டனர். ஆனால், அதற்கு நேரடியாக அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. சிம்பு, நிதி அகர்வால் காதல் தொடர்கிறதா, முடிந்துவிட்டதா, வருங்காலத்தில் துளிர்க்குமா என்பது பலரும் தெரியாத விடையாக இருக்கிறது. சிம்புவின் தங்கை, தம்பிக்கு திருமணம் முடிந்து அவர்களுக்கு குழந்தையும் பிறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.