ஆயிரமாவது பாடலை எழுதிய மதன் கார்க்கி
சினிமாவில் 100, ஆயிரம் போன்ற எண்களுக்கு, அதை தொடும்போது தனி மதிப்பு உண்டு. எந்திரன் படத்தில் இடம் பெற்ற இரும்பிலேயே இருதயம் பாடலின் மூலம் பாடலாசிரியர் ஆன மதன் கார்க்கி, இப்போது ஆயிரமாவது பாடலை பறந்து போ படத்தில் எழுதியிருக்கிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்த இந்த படத்தில் மொத்தம் 19 பாடல்கள். அதில் ஸ்மோக்கிங் கில்ஸ் என்ற பாடல் அவரின் ஆயிரமாவது பாடல்.
பாடலாசிரியர், வசனகர்த்தா, எழுத்தாளராக இருக்கும் மதன் கார்க்கி இன்னொரு மிகப்பெரிய திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் இருக்கிறாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். மதன்கார்க்கி தந்தையான பாடலாசிரியர் வைரமுத்து 6 ஆயிரம் பாடல்கள் வரை எழுதியுள்ளார். இந்த சாதனையை மதன் கார்க்கி வருங்காலத்தில் ஈடு செய்யலாம் அல்லது மிஞ்சலாம்.
மதன் கார்க்கி மனைவி நந்தினியும் ஆங்கில கவிதை தொகுப்பு வெளியிட்டுள்ளார். பல படங்களுக்கு ஆங்கில சப் டைட்டில் எழுதிக் கொடுக்கிறார்.