தேனீ வாயில் புகுந்ததால் கரிஷ்மா முன்னாள் கணவர் மரணம்?
பாலிவுட் நடிகையான கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் இரு தினங்களுக்கு முன்பு திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குக் காரணம் மாரடைப்பு என அவரது நிறுவனத்தினரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் போலோ விளையாடிய போது மைதானத்தில் தேனீ ஒன்று அவருடைய வாயில் புகுந்துள்ளது. அது மூச்சுக்குழாயில் நுழைந்ததால் அவரால் மூச்சுவிட முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதைப் பற்றி நடிகையும், எம்.பியுமான கங்கனா ரணவத் குறிப்பிட்டு இரங்கலையும் தெரிவித்து, அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனால், சஞ்சய் மறைவுக்கு தேனீ தான் காரணமாக இருந்திருக்கும் என்பது உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சஞ்சயின் மரணத்திற்கான காரணம் பாலிவுட்டினரிடமும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.