ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி
ADDED : 111 days ago
கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் காட்டி. இதில் அவருடன் இணைந்து விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனுஷ்கா அதிரடி ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றது. அதோடு, அனுஷ்காவா இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மிரட்டலான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் இந்த காட்டி படத்தின் ஓடிடி உரிமை 36 கோடிக்கு விற்பனை ஆகியிருப்பதாக டோலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அதோடு ஒரு ஹீரோயின் கதையின் நாயகியாக நடித்த எந்த ஒரு படமும் இவ்வளவு தொகைக்கு இதுவரை விற்பனை ஆனதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த காட்டி படம் வருகிற ஜூலை 11ம் தேதி திரைக்கு வருகிறது.