மேலும் செய்திகள்
காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம்
109 days ago
திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ்
109 days ago
'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு தமிழ் இயக்குனரான அட்லி இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன். சென்னையில் பிறந்து படித்து வளர்ந்த, நன்கு தமிழ் பேசத் தெரிந்த அல்லு அர்ஜுன் தமிழ் இயக்குனர் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. இதனால், அவரை வைத்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த சில தெலுங்கு இயக்குனர்கள் வருத்தத்தில் உள்ளதாகப் பேச்சு எழுந்துள்ளது.
திரிவிக்ரம் சீனிவாஸ் படத்தில் நடிக்க இருந்த அல்லு அர்ஜுன், திடீரென அட்லி இயக்கத்தில் நடிக்க சம்மதித்து படமும் ஆரம்பமாகிவிட்டதால் இருவருக்கும் இடையே மோதல் என டோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏட்டிக்குப் போட்டியாக திரிவிக்ரம், அல்லு அர்ஜுன் தரப்பில் அவர்களது அடுத்தடுத்த படங்கள் பற்றிய செய்திகளை பரவவிடுகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
இதனிடையே, கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ள அட்லியை அல்லு அர்ஜுன் வாழ்த்தியுள்ளார். “கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ள அட்லி காருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் ஆர்வமும், கலையும் இந்த அளவில் கொண்டாடப்படுவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
109 days ago
109 days ago