ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சி பெறும் லோகேஷ் கனகராஜ்!
ADDED : 113 days ago
தற்போது ரஜினி நடிப்பில் ‛கூலி' படத்தை இயக்கி முடித்திருக்கும் லோகேஷ் கனகராஜ், அந்த படத்தின் இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து கார்த்தி நடிப்பில் ‛கைதி-2' படத்தை இயக்க தயாராகி வருகிறார். விரைவில் அப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கவுள்ளன. அதோடு இன்னொரு பக்கம், அருண் மாதேஸ்வரன் இயக்குனர் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்காக தற்போது தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர், கைதி-2 படத்தின் படப்பிடிப்புக்கு முன்பே இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கி விடுவார் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன. இப்படம் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.