உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛சூர்யா 45' படத்தின் தலைப்பு இதுவா?

‛சூர்யா 45' படத்தின் தலைப்பு இதுவா?


ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்துள்ளார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் தலைப்பை ஒரு டைட்டில் டீசர் வீடியோவாக வருகின்ற ஜூன் 20ம் தேதியன்று ஆர்.ஜே. பாலாஜி பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு ஏற்கனவே ‛வேட்டை கருப்பு' வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இப்போது இந்த படத்திற்கு 'கருப்பு' என்கிற தலைப்பை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !